கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகரில் உள்ள கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு தனியார் பீச் ரிசார்ட் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த மைசூரைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் உயிரிழந்தனர்.
நேற்று (நவ.16) காலை மைசூரில் இருந்து நிஷிதா (21), பார்வதி (20), கீர்த்தனா (21) ஆகிய மூன்று பெண்கள், தனியார் பீச் ரிசார்ட்டுக்கு வந்து அறை எடுத்துள்ளனர்
இவர்கள் இன்று (நவ.17) காலை 8.30 மணியளவில் நீச்சல் குளத்திற்கு நீராடச் சென்று குளத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஒரு பெண் நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் ஆறு அடி ஆழம் உள்ள பகுதிக்கு சென்று மூழ்கி உயிரிழந்துள்ளார். மற்ற இருவரும் மூழ்கிய பெண்ணை மீட்க முயற்சி செய்த நிலையில் அவர்களும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.