துணிவு படத்தின் 3-வது பாடல் கேங்ஸ்டா அப்டேட்..!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டாலும், தற்போது வரை டீஸர் ட்ரைலர் எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில் படத்தின் 3-வது பாடல் கேங்ஸ்டா டிசம்பர் 25-ஆம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் கேங்ஸ்டா பாடலின் வரிகள் மற்றும் போஸ்டரோடு பதிவிட்டுள்ளர்.