ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் துணிவு படமும், வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படமும் வரும் ஜனவரி 11ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளது.
இந்த இரண்டு படங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு துவங்கிய வேகத்தில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்த டிக்கெட் முன்பதிவில் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அதிக புக்கிங் உள்ளதாம்.

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் விஜயின் வாரிசு படத்திற்கு டிக்கெட் முன்பதிவு ரூ. 6.16 கோடிக்கு நடந்திருக்கிறது. அஜித்தின் துணிவு படத்திற்கு டிக்கெட் முன்பதிவில் மட்டும் ரூ. 6.24 கோடி வசூல் செய்திருக்கிறது.
டிஜிட்டல், சாட்டிலைட் உள்ளிட்ட உரிமங்களை விற்பனை செய்தது மூலம் வாரிசு படம் ரூ. 300 கோடியும் துணிவு படம் ரூ 193.6 கோடியும் வசூல் செய்துள்ளது.