அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், ரிலீசுக்கு முன்னரே பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதன்படி, 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள துணிவு திரைப்படம், ஒட்டுமொத்தமாக, 193 கோடியை வசூலித்துள்ளது.
இதேபோன்று, 225 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படம், 295 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த தகவலை அறிந்த அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள், கடும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.