அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி.. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

கடந்த தீபாவளி பண்டிகை அன்று, துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிலும், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிலும் வெளியாகும் என்று தகவல் பரவி வந்தது. இவ்வாறு இருக்க, வாரிசு படத்தின் புதிய போஸ்டர் மட்டும் வெளியாகியிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

வரும் நாட்களில் ஃபர்ஸ்ட் சிங் வெளியாகும் என்ற நம்பிக்கையில், அஜித் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், இப்போதைக்கு துணிவு படத்தின் சிங்கில் வெளியாகாது என்று தகவல் வந்துள்ளது.

மேலும், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில், அடுத்த வாரம் வெளியாகும் என்றும், அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் ட்ரைலர் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியிலும், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.