துணிவு திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. பட வெளியீட்டிற்கு, குறுகிய காலங்களே இருப்பினும், படத்தின் புரோமோஷன் பணிகள் இன்னும் சூடுபிடிக்கவில்லை.
மேலும், விரைவில் வெளியாகும் என்று சொன்ன, துணிவு பர்ஸ்ட் சிங்கிலும் வெளியாகவில்லை. இவ்வாறு இருக்க, மற்றொரு தகவல் வெளியாகி, அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
அதாவது, சில்லா சில்லா பாடலின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லையாம். அது முடிவடைந்த பிறகு தான், லிரிக்கல் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எப்போது பாடல் வெளியாகும் என்று ரசிகர்கள் ஏக்கத்துடன், இணையத்தில் கேட்டு வருகின்றனர்.