துணிவு படத்தால் பிரச்சனையில் சிக்கிய வாரிசு!

அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இரண்டு திரைப்படங்களின் மீதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், துணிவு படத்தால், வாரிசு படத்திற்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த இரண்டு திரைப்படங்களும், 1200 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில், 650 திரையரங்குகளில் துணிவு படமும், 550 திரையரங்குகளில் வாரிசு படமும் வெளியாக இருக்கிறது.

கிட்டதட்ட 100 திரையரங்குகள் குறைவாக இருப்பதால், வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், படத்தின் விமர்சனங்களை பொறுத்து, திரையரங்குகளின் எண்ணிக்கை மாறுபடும் என்றும் கூறப்படுகிறது.