அஜித்தின் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த படத்தை திரையில் கொண்டாடிய ரசிகர்கள், தற்போது Youtube தளத்தில் கொண்டாட தொடங்கியுள்ளனர். அதாவது, படம் தொடர்பான ஆக்ஷன் காட்சிகளின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும், இந்த படத்திற்காக அஜித் கடினமாக உழைத்துள்ளார் என்றும் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.