அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படம், கடந்த 11-ஆம் தேதி அன்று வெளியானது. பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்து வெளியான இந்த 2 திரைப்படங்களும், விடுமுறை தினங்கள் முடிந்த பிறகு, வசூலில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு வார நாட்களில் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விஜயின் துணிவு திரைப்படம் குடும்ப ஆடியன்ஸை மையமாக வைத்து எடுத்துள்ளதால், வார நாட்களிலும், இந்த படத்தின் வசூல் குறையவில்லையாம். நல்ல விமர்சனம் பெற்ற துணிவுக்கு இந்த நிலையா? என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.