எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், துணிவு படத்தின் இடம்பெறும் வசனம் ஒன்று இன்றைய அரசியல் சூழலை பிரதீபலிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து “ரவீந்தர் இது தமிழ்நாடு… உங்க வேலைய இங்க காட்டாதீங்க” என்ற வசனத்தை பேசியுள்ளார். இது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.