யாருக்கு அதிக தியேட்டர்! துணிவுக்கா? வாரிசுக்கா? ரசிகர்கள் காட்டம்!

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், எந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாரிசு படத்தை காட்டிலும், துணிவு படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

சுமார் 600-க்கும் அதிகமாக திரையரங்குகளில், இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாம். இந்த தகவல், விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.