கர்ஜிக்க காத்திருக்கும் துணிவு! புதிய அப்டேட்!

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. பொங்கல் பண்டிகை அன்று படம் வெளியாக உள்ளதால், பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக, நடிகர் ஜி.எம்.சுந்தர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

துணிவு படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளிவருவதால், ரசிகர்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.