வெளிநாட்டில் வேலைக்கு ஆகல! வாரிசை நெருங்க முடியாத துணிவு!

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு திரைப்படங்களையும், இயக்குநர் எச்.வினோத் தான் இயக்கியிருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும், தமிழகத்தில் நல்ல வசூலை குவிந்திருந்தது.

ஆனால், வெளிநாடுகளில், பெருமளவில் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக, அஜித்தின் துணிவு திரைப்படத்தை வெளிநாடுகளில் வாங்குவதற்கு, விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம்.

மேலும், வாரிசு படம் வாங்கப்பட்டுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் குறைவாகவே துணிவு திரைப்படம் வாங்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல், அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.