ஜனவரி 1-ஆம் தேதி ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் துணிவு படக்குழு!

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. பொங்கல் பண்டிகை அன்று இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர், விறுவிறுப்பாக புரோமோஷன் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, ஜனவரி 1-ஆம் தேதி அன்று, பிரம்மாண்டமான முறையில், புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம். இந்த நிகழ்ச்சியில், போனி கபூர், எச்.வினோத், மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொள்ள உள்ளனராம்.

ஆனால், வழக்கம்போல், இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியிலும், அஜித் கலந்துக்கொள்ளவில்லையாம்..