அஜித்திற்காக விட்டுக்கொடுத்த விஜய்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு, அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளது. துணிவு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலேயே நடைபெற்ற மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்த நாளான ஜனவரி 13-ஆம் தேதி அன்று, விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.

துணிவு படம் வெளியாகி, ஒரு நாள் கழித்து வாரிசு திரைப்படம் வெளியாக விஜய் முடிவு செய்துள்ளது, அவரது பெரிய மனசு என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன்மூலம், இருதரப்பினரின் திரைப்படங்களும் நல்ல லாபம் பெறும் என்றும் விஜயின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.