துணிவு கதை பற்றி வெளியான சூப்பர் சீக்ரெட்!

விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், வாரிசு திரைப்படம், பக்கா குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், துணிவு திரைப்படம், பக்கா ஆக்ஷன் திரைப்படம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் கதை பற்றிய சீக்ரெட் ஒன்று, தற்போது கசிந்துள்ளது.

அதாவது, துணிவு திரைப்படத்திலும், குடும்ப செண்டிமென்ட் காட்சிகள் இருக்கும் என்றும், தனது மனைவி மற்றும் மகளுக்காக அஜித் பழிவாங்குவது கிளை கதையாக இருக்கும் என்றும், கூறப்படுகிறது.

மேலும், மகளுக்காக அஜித் போராடும் காட்சிகள், ரசிகர்களை கண்கலங்க செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. இதனை படக்குழு, படு சீக்ரெட்டாக வைத்திருக்கின்றனராம்.