Connect with us

Raj News Tamil

“இதுதான் உங்க அப்டேட்-ஆ” – ரசிகர்களை ஏமாற்றிய துணிவு படக்குழு!

சினிமா

“இதுதான் உங்க அப்டேட்-ஆ” – ரசிகர்களை ஏமாற்றிய துணிவு படக்குழு!

அஜித்தின் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. ரிலீசுக்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் அப்டேட்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், துணிவு படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிடுவதாக, நேற்று போனி கபூர் அறிவித்திருந்தார். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

ஆனால், படத்தின் சுமாரான அப்டேட்டே தற்போது வெளியாகியுள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் யார்? யார்? அதில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மை பா என்ற கதாபாத்திரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடிக்க உள்ளாராம். டிரைலர் தொடர்பாக தான் அப்டேட் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த அப்டேட் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top