துணிவு படத்தில் இதுதான் ஹைலைட்.. ஆச்சரியமான தகவல்!

2023-ஆம் ஆண்டிற்கான, மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று துணிவு. இந்த படத்தின் பின்னணி வேலைகள், மிகவும் மும்மரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற, மிகவும் ஹைலைட்டான விஷயம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, சார்பட்ட பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த ஜான் கெகைனுக்கும், அஜித்திற்கும், மாஸ் சண்டைக் காட்சி ஒன்று உள்ளதாம்.

இந்த காட்சி, தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதுமையானதாக இருக்கும் என்றும், இது ரசிகர்களை பெருமளவில் கவரும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அஜித் ரசிகர்கள், கடும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.