எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் வசூலை வாரி குவித்து வருகிறது.

அஜித் நடித்த ‘துணிவு’ படத்தை 65 கோடி ரூபாய் கொடுத்து ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படம் பிப்ரவரி 10-ம் தேதி ஒரே நாளில் ஓடிடி தளங்களில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி ‘வாரிசு’ திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படலாம் எனக் கூறப்படுகிறது.