துணிவு ஓடிடி ரிலீஸ் அதிக தொகைக்கு விலை போகியுள்ளதா..?

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்கும் இப்படம்,வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில், சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா பாடல் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் துணிவு படத்தின் ஓடிடி உரிமைத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுமார் 70 கோடி ரூபாய்க்கு போஸ்ட் ரிலீஸ் உரிமைத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஓடிடி ரிலீஸ் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.