முதல் இடத்திலும் அஜித், 2-வது இடத்திலும் அஜித் தான்..?

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. இவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துவரும் இப்படத்தில், சமுத்திரகனி, யோகி பாபு,பவானி, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து காசேதான கடவுளடா எனும் பாடல் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.

இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது, மேலும் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.