அஜித் நடிப்பில், ஜனவரி 11-ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கின் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்தனர். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது.
இன்றுடன் 50-வது நாளை நிறைவு செய்யும் துணிவு திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ.330 கோடிக்கும் மேலாக வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே துணிவு என்ற ஆஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.