துணிவு படத்தின் ட்ரைலர் எப்போது? ரசிகர்களுக்கு நல்ல தீனி தான்!

இயக்குநர் எச்.வினோத், நடிகர் அஜித் கூட்டணி, துணிவு திரைப்படத்தின் மூலம், 3-வது முறையாக இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இந்த படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்து வந்தனர்.

இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த அஜித்தின் ரசிகர்கள், கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.