வாரிசு மற்றும் துணிவு கடந்த 11-ஆம் தேதி அன்று வெளியானது. சுமார் 9-ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வாரிசு படம் சற்று கலைவையான விமர்சனத்தை பெற்று வர, துணிவு படமோ பாசிடிவ் விமர்சனங்களை பெற்று அசத்தி வருகிறது.
அந்த வகையில் முதல் நாள் வசூலில், வாரிசு படத்தை விட துணிவு அதிக வசூல் செய்தது. தற்போது 2-வது நாளிலும் அதே இடத்தை தக்கவைத்துள்ளது. அதன் படி தமிழகத்தை பொருத்தவரை வாரிசு ரூ.33 கோடியும், துணிவு ரூ 37 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.