இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், வித்யுத் ஜாம்வால், சத்யன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படம் கடந்த 2012 ம் ஆண்டு தீபாவளியன்று வெளியிடப்பட்டது.
விஜய்யின் கெரியர் பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்றான துப்பாக்கி திரைப்படம் உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. விஜய் நடித்த படங்களிலே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் இதுதான்.
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #11YearsOfThuppakki என குறிப்பிட்டு கொண்டாடி வருகிறார்கள்.