Connect with us

Raj News Tamil

சபரிமலை – சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

இந்தியா

சபரிமலை – சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்ட நிலையில் ஐயப்பன் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதனையடுத்து கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில், செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிச.24, 31 தேதிகளில் மாலை 4.30 மணிக்கும், ஜன.7-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜன.10, 17-ஆம் தேதிகளில் மாலை 4 மணிக்கும், ஜன.14-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு டிச.9, ஜன.13, ஜன.20 தேதிகளில் இரவு 11 மணிக்கும், டிச.26, ஜன.2, 9, 12, 19, 16 தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோட்டயத்துக்கு டிச.1, 8, 29, ஜன.12, 19 தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், டிச.15, 22, ஜன.5 தேதிகளில் மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு டிச.3, 10, 17, 24, 31, ஜன.7, 14, 21 தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், ஆந்திர மாநிலம் நா்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு டிச.10, 17, 24, 31 ஜன.7, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.11, 18, 25, ஜன.8, 15 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோவை, திருச்சூா் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top