உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியை சேர்ந்த பெண், தனது 2 வயது மகனுடன், கடந்த 16-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு தெரிந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர், அங்கு வந்துள்ளார்.
இந்த பெண்ணை பார்த்த அவர், குழந்தையுடன் பொதுவகுப்பில் பயணம் செய்வது கஷ்டம் என்று கூறி, ஏசி வகுப்பில், பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதனை நம்பி அங்கு சென்ற அந்த பெண்ணை, மயக்க மருந்து கொடுத்து, ரயிலிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், மயக்கம் தெளிந்த பிறகு, அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த டிக்கெட் பரிசோதகரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரையும், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.