Connect with us

Raj News Tamil

“நான் உயிரோடு இருக்கும்வரை..,” – பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு..

இந்தியா

“நான் உயிரோடு இருக்கும்வரை..,” – பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு..

வரும் 25-ஆம் தேதி அன்று 6-ஆம் கட்ட தேர்தலும், 1-ஆம் தேதி அன்று 7-ஆம் கட்ட தேர்தலும், இன்னும் நடத்தப்பட உள்ளது. இந்த இரண்டு கட்ட தேர்தல்களுக்காக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர், தொடர்ச்சியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஹரியானாவின் பிவானி என்ற பகுதியில், பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“மேற்கு வங்கத்தில், அவர்கள் ( திரிணாமூல் காங்கிரஸ் கட்சி )முஸ்லீம்களுக்கும், அந்த வந்தேறிகளுக்கும், OBC சாதி சான்றிதழை, ஒரே நாள் இரவில் கொடுத்துவிட்டார்கள். ஆனால், கடந்த 10-12 வருடங்களில், முஸ்லீம்களுக்கு வழங்கிய ஓ.பி.சி சாதி சான்றிதழ் செல்லாது என்று சமீபத்தில் உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இண்டியா கூட்டணியின் மனநிலையை பாருங்கள், உயர் நீதிமன்றத்தின் முடிவை, என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது என்று மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் கூறியுள்ளார். OBC இடஒதுக்கீட்டை, முஸ்லீம்களுக்கு கொடுப்பீர்களா?” என்று கூறினார்.

“காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர், தங்களது வாக்கு வங்கிக்கு ஆதரவு தருகிறார்கள்.

ஆனால் இன்று, நான் உயிரோடு இருக்கும் வரை, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை, யாரும் பறிக்க விட மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

பறிக்கப்பட்ட உரிமைகளுக்கான வாட்ச்மேன் தான் இந்த மோடி. இது அரசியல் பேச்சு அல்ல. இது மோடியின் உறுதிமொழி” என்று கூறினார்.

இண்டியா கூட்டணி தலைவர்களை கடுமையாக தாக்கிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சிக்கும், இண்டியா கூட்டணி தலைவர்களுக்கும், நாட்டை விட, அவர்களது வாக்கு வங்கி தான் முக்கியம். இவர்கள், தங்களது வாக்கு வங்கிக்காக நாட்டை பிளவுப்படுத்தி வைத்திருக்கின்றனர். அவர்கள் ஒரு இந்தியாவையும், இரண்டு முஸ்லீம் நாடுகளையும் உருவாக்கி இருக்கிறார்கள்” என்று சாடினார்.

More in இந்தியா

To Top