முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2ஆம் தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் போது தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் கோவில் அருகே உள்ள தற்காலிக கலையரங்கத்தில் நடந்து வருகிறது.
பழனியில் நடந்த முறுகு தமிழ் மாநாட்டில் முருகனின் பாடல்களை பாடி பிரபலமாகி பேர் பெற்ற 7 வயது சிறுமி சென்னையை சேர்ந்த அருளிசை குழந்தை தியா இன்றைய (நவ.7) தினம் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தார்.
அவர் கோவில் பகுதியில் உள்ள கலையரங்கத்தில் ஆன்மிக பாடல்களை பாடினார். அப்போது முருகனின் பாடல்களை மிகவும் அருமையாகவும் அழகான பாவனையுடன் பாடி அசத்தினார். அதை அங்கிருந்த பக்தர்கள் கான் இமைக்காமல் கண்டு ரசித்தனர்.
பாடல்களை பாடி முடித்த பின்னர் அங்கிருந்த பக்தர்கள் சிறுமி தியாவை பாராட்டினர்.