பொது மக்களை கண்டுகொள்ளாமல் உணவு ஆர்டர் செய்யும் பெண் ஆர்.ஐ – வைரல் வீடியோ

திருப்பூர்- தாராபுரத்தில் பொதுமக்களை கால் கடுக்க காக்க வைத்து விட்டு. மேல் அதிகாரிக்கு கறி விருந்து கொடுக்க ஆர்டர் செய்த பெண் ஆர் ஐ யின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாராபுரம் டவுன் ஆர் ஐ ஆக தனலட்சுமி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பொதுமக்களை பல மணி நேரம் கால் கடுக்க நிக்க வைத்து விட்டு தனது மேல் அதிகாரியை காக்கா பிடிப்பதற்காக மட்டன் பிரியாணி, காளான் சில்லி, ஒயிட் ரைஸ், கோலா உருண்டை, மட்டன் வகைகளை ஆர்டர் செய்து கொண்டு பொதுமக்கள் நிற்க வைத்து பேசி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் ஆர்.ஐ தனலட்சுமி மீது மாவட்ட ஆட்சித் தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

RELATED ARTICLES

Recent News