Connect with us

Raj News Tamil

திருவண்ணாமலை கோவிலில் உண்டியல் காணிக்கை…இத்தனை கோடியா!!

ஆன்மீகம்

திருவண்ணாமலை கோவிலில் உண்டியல் காணிக்கை…இத்தனை கோடியா!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், ஆனி மாத உண்டியல் காணிக்கையில், 2 கோடியே, 27 லட்சத்து, 30ஆயிரத்து, 646 ரூபாய்யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலிற்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலையம்மனை தரிசனம் செய்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.

இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள், இரண்டு கோடியே, 27 லட்சத்து, 30ஆயிரத்து, 646 ரூபாய் செலுத்தியுள்ளனர். மேலும், தங்கம்149 கிராமும், வெள்ளி1,260 கிராமும் செலுத்தியுள்ளனர்.

More in ஆன்மீகம்

To Top