Connect with us

Raj News Tamil

திருவண்ணாமலை மஹாதீபத்திருவிழா கொடியேற்றம்!

ஆன்மீகம்

திருவண்ணாமலை மஹாதீபத்திருவிழா கொடியேற்றம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காவல் தெய்வங்களை வழிபாடு செய்த பின்னரே தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கும். இந்நிலையில், 3 நாட்கள் நடைபெறும் காவல் தெய்வ வழிபாட்டின் முதல் நாளான நவம்பர் 14ம் தேதி ஸ்ரீதுா்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.

இரண்டாம் நாளன்று ஸ்ரீபிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வழிபாடு செய்யப்பட்டது. கடைசி நாளான இன்று ஸ்ரீசம்பந்த விநாயகருக்கு பூஜைகள் நடைப்பெற்று இன்றுடன் காவல் தெய்வங்களின் வழிபாடு நிறைவு பெறுகிறது.

இதனை தொடர்ந்து, நாளை காலை 6 மணிக்கு தீப திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை மஹாதீபம் 2,668 அடி உயர மலையில் நவம்பர் 26ஆம் தேதி ஏற்றப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in ஆன்மீகம்

To Top