கமலாலய கசமுசா..அம்பலப்படுத்திய பாஜக மாவட்ட மகளிர் அணி

திருவாரூர் மாவட்ட பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவர் சுதந்திரா தேவி என்பவர் அண்மையில் கமலாலயத்தை குறித்து புகார் தெரிவித்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அண்மையில் திருச்சி சூர்யா சிவா டெய்சி சரணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டும் விடுக்கும் ஆடியோ வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

சர்ச்சைக்கு மிக முக்கிய காரணமான திருச்சி சூர்யாவை கட்சியை விட்டு நீக்காமல், சஸ்பெண்ட் செய்யாமல் மாறாக கட்சியின் அடிப்படை உறுப்பினராக திருச்சி சூர்யா நீடிப்பார் என அண்ணாமலை தெரிவித்தார். இது கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெண் நிர்வாகிகள் விரட்டியடிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட பெண் நிர்வாகி சுதந்திரா தேவி பகிரங்கமாக வீடியோ வெளியிட்டு குற்றசாட்டு வைத்துள்ளார். கமலாலயத்தில் உள்ள ஊழியர்கள், நிர்வாகிகள் அவர்களுக்கு தேவைப்படும் பெண்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலையிடம் புகார் கொடுத்ததாகவும் ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை என சுதந்திரா தேவி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.