திருவேற்காடு கோயில் அம்மன் நகை மாயம்! – அர்ச்சகர் தலைமறைவு!

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த எட்டு சவரன் நகை காணவில்லை என கடந்த 5-ம் தேதி அர்ச்சகர்கள் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிர்வாகம் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயினை தற்காலிக அர்ச்சகர் சண்முகம் என்ற பாபு(40) திருடி அடகு வைத்தது தெரியவந்தது. அடகு வைத்த நகையை போலீசார் மீட்டனர். தற்போது தலைமறைவாக உள்ள அர்ச்சகரை திருவேற்காடு போலீசார் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News