கலப்பட உணவு.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

காஞ்சிபுரம் அருகே, கலப்பட உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, த.ம.மு.க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், ஆட்சியர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல உணவகங்களில், கலப்படமான உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனவே, அந்த உணவகங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கலைச்செல்வி, மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தார்.

RELATED ARTICLES

Recent News