ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னரின் சார்பில் தேநீர் விருந்து கொடுக்கப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்தில், முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையில் உயர்பதவிகளை பெற்றிருப்பவர்கள், கலந்துக் கொள்வார்கள்.
இவ்வாறு இருக்க, இந்த ஆண்டுக்கான தேநீர் விருந்திற்காக, தமிழக அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக, ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதால், இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இவர்கள் மட்டுமின்றி, திமுகவின் கூட்டணி கட்சிகளும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.