2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை, மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து, மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக, தங்களது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றன.
இதற்கிடையே, 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட், நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு தயாரித்துள்ள பொருளாதார அறிக்கையை, முதல்முறையாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்றும், தனி நபர் வருமானம் 2.78 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய சராசரியை விட, தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1.64 மடங்கு அதிகம் என்றும், கொரோனா தொற்றுக்கு பிறகு, தமிழகத்தில் சேவைத்துறைகள் மீண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.