மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு, மத்திய அரசு ஏலம் விடுத்திருந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த ஏலத்தை தற்காலிகமாக, மத்திய அரசு நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்து வந்தது.
இருப்பினும், தங்களது போராட்டத்தை கைவிடாத மக்கள், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை, நிரந்தரமாக ரத்து செய்வதாக, மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர்.
மேலும், கோரிக்கை ஏற்றுக் கொண்டதற்கும், உறுதுணையாக இருந்ததற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 11 ஆயிரத்து 608 வழக்குகளும், வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.