இந்திய முழுவதும் உள்ள சட்டமன்றங்களில், கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாள் அன்று, ஆளுநர் உரை நிகழ்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், உரை நடத்துவதற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்திருந்தார்.
அப்போது, தேசிய கீதம் பாட வேண்டும் என்று, ஆளுநர் கூறினார். ஆனால், அதற்கு பதிலாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த ஆளுநர், சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, வெளிநடப்பு செய்தார். இது, சட்டமன்றத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.