காலை உணவுத்திட்டம்! புதுமைப்பெண் திட்டம்! அசத்திய மாநகர பேருந்து!

சட்டசபை தேர்தலுக்கு முன், புதுமைப்பெண் மற்றும் காலை உணவுத்திட்டங்களை தேர்தல் அறிக்கையாக ஆளும் திமுக அரசு கூறியிருந்தது. அதன் அடிப்படையில் புதுமைப்பெண் திட்டம் கடந்த மாதம் 6-ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் தொடங்கப்பட்டது.

இதனால் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்த மாணவிகள் பயனடைவார்கள். காலை உணவுத்திட்டம் கடந்த மாதம் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று, முதலமைச்சர் ஸ்டாலின் முதற்கட்டமாக தொடங்கிவைத்தார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1500-க்கும் மேற்ப்பட்ட அரசுப்பள்ளிகள் பயனடையும். இந்த திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகங்கள் சார்பில், இன்று மாநகரப்பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.