தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்தது கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. அரசின் உரையை வாசித்த ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் சில வார்த்தைகளை விட்டும், சில வார்த்தைகளை சேர்த்தும் வாசித்து முடித்தார்.

இதையடுத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல் ஆட்சிக்கு முரணாக செயல்படுவதாக சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே அவையில் இருந்து கோபமாக வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசு சார்பில் கண்டனத்தை பதிவு செய்தார்.
தமிழக அரசையும், முதலமைச்சர் அவர்களின் தகுதியை அவமதிக்கும் வகையிலும், அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவியை கண்டித்து வரும் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.