ஆரம்பத்தில் தனியார் வசம் இருந்த மதுபானக் கடைகள், பின் நாட்களில், அரசின் வசம் சென்றது. கலப்படமான மது அருந்தி, பொதுமக்களின் நலன் பாதிக்கப்பட்டதால், அதனை அரசே ஏற்று நடத்தி வந்தது. தற்போது டாஸ்மாக் கடைகளிலும், சில உயர்மட்ட ஹோட்டல்களிலும் மட்டும் தான் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
மற்ற பொது இடங்களில் மது விற்பனை செய்வது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இந்நிலையில், திருமண மண்டபங்களில் மது விநியோகம் செய்வதற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதாவது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுவிலக்கு துணை ஆணையர் ஆகியோரிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு, திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்தலாம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இதேபோன்று, விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்துவதற்கு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த அறிவிப்பை அறிந்த நெட்டிசன்கள் பலரும், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “ ஓ.. இதுதான் திராவிட மாடலா..” என்றும் விமர்சனம் எழுந்து வருகிறது.