ஒவ்வொரு ஆண்டும், பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் ஆகிய 3 நாட்களுக்கும், அரசு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான விடுமுறை, ஜனவரி 14, 15, 16 ஆகிய நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வாரங்களில் வரும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும், அரசு விடுமுறையாக உள்ளது.
இடையே, வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருப்பதால், அன்று பொது விடுமுறை வழங்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பில் இருந்து, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று, தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 17-ஆம் தேதியான, வெள்ளிக்கிழமையும் பொதுவிடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.