ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். சென்ற ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டபோது, பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினார்.
எனவே, இந்த முறை எந்த பிரச்சனையும் நடக்கக் கூடாது என்றும், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கும், அசத்தலான திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. அந்த திட்டத்தின்படி, ரேஷன் அரிசு அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட உள்ளது.
அந்த டோக்கனில், ரேஷன் கடை, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நாள், நேரம் ஆகிய விவரங்கள் இருக்கும். இதன்மூலம், ரேஷன் கடையின் அளவைப் பொறுத்து, ஒரு நாளைக்கு 100 முதல் 500 பேர் வரை, பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியும்.
எனவே, மக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல், விரைவில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, ரேஷன் பொருட்களை இனி இரவில் எடுத்துச் செல்லக் கூடாது என்று விதியும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் எந்தவொரு முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.