அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு! ஒவ்வொருத்தருக்கும் ரூ.10 லட்சம் உயர்வு!

தமிழக அரசின் சூப்பரான திட்டம்.. யாருக்கெல்லாம் கிடைக்கப் போகுது ரூபாய் 10 லட்சம்.. விரிவான விவரம் பின்வருமாறு:-

தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வீடு கட்டுவதற்கு முன்பணம் வழங்கும், திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்காக, ரூபாய் 40 லட்சம் வரை, வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சமீபத்தில் கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டது.

அதில், “அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு, முன்பணமாக ரூபாய் 40 லட்சம் கொடுக்கப்படுகிறது. அது தற்போது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று அரசு ஊழியர்கள் பலரும் எதிர்பார்த்துக் கிடந்தனர்.

தற்போது, அதற்கான அறிவிப்பு வெளியாகி, யாருக்கு இந்த பணம் கிடைக்கும், யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. அதாவது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்த்துறை முதன்மைச் செயலர் அபூர்வா, உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பழைய விகிதப்படி வீடு கட்டுவதற்கான முன்பணத்தைப் பெற ஒப்புதல் கிடைக்கப் பெற்று, ஒரு தவணைத் தொகை கூட பெறாதவர்களுக்கு புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும்.

அவர்கள் ரூ.40 லட்சத்துக்குப் பதிலாக ரூ.50 லட்சம் வரையில் முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். முன்பணத்துக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், வீட்டை கட்டி முடிக்காதவர்களுக்கும் புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும்.”

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News