முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்து, நேற்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த ஆட்சியில், பல நிறைகளும், சில குறைகளும் உள்ளது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர், தன்னுடைய அமைச்சரவையில் மாற்றம் செய்ய, ஆலோசனை நடத்தி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு மாற்றம் செய்ய அமைச்சர்களின் விவரம் பின்வருமாறு:-
அமைச்சரின் பெயர் – முந்தைய துறை – மாற்றம் செய்யப்பட்ட துறை
1. தங்கம் தென்னரசு – தொழில் துறை – நிதித்துறை
2. பி.டி.ஆர் – நிதித்துறை – தகவல் தொழில்நுட்பத் துறை
3. மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை – பால்வளத்துறை
இவர்கள் மட்டுமின்றி, ஒரு அமைச்சரை விடுத்து, சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு, தொழிற்துறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாம். அதேபோல், முதலமைச்சரின் தனிச்செயலாளர், அரசின் முக்கியத் துறைகளை நிர்வகிக்கும் செயலாளர்கள் மட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மே 10-ஆம் தேதி அன்று, நடைபெற உள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன்பு, இதேபோன்று தகவல்கள் வெளியாகி வந்தாலும், பலமுறை அமைச்சரவை மாற்றம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இந்த முறை, மாற்றங்கள் நிகழ்வது, உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.