தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் இதேபோல் பார்சல் வசதி கொண்டு வர வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்றில் இருந்து அரசு பேருந்துகளில் பார்சல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அரசு விரைவுப் பேருந்துகளில் மட்டும் இனி பார்சல்களை அனுப்ப முடியும். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும் வியாபாரிகள், விவசாயிகள் பல நாட்களாக கோரிக்கை வைத்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது.

முதல் கட்டமாக 7 நகரங்களில் மட்டும் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, ஓசூர், கோவை, செங்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் அனுப்ப முடியும்.

இந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு பேருந்துகளின் மேல் பார்சல்களை அனுப்ப முடியும். இந்த 7 நகரங்களில் பேருந்து நிலைய அதிகாரிகளை அணுகி, அங்கு உள்ள முன் பதிவு மையத்தில் பார்சல் பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகளில் பார்சல் வசதி செயல்படுவது போலவே இதிலும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பேருந்துகளை விட கட்டணம் 30 சதவிகிதம் இதில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து கழகத்திற்கும் இதனால் வருமானம் அதிகரிக்கும்.ஆனால் அதிகபட்சம் 80 கிலோ வரை மட்டுமே பார்சல் அனுப்ப முடியும். 80 கிலோ வரையிலான பார்சல் அனைத்திற்கும் ஒரே விலை ஆகும்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு பார்சல் அனுப்ப 210 ரூபாய் ஆகும். இதேபோல் மற்ற நகரங்களுக்கு 230, 300 என்ற அளவில் பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மாத கட்டணமும் செலுத்தி தினமும் கூட பார்சல் அனுப்ப முடியும். வாராந்திர கட்டண முறையும் உள்ளது.