ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் புகையிலை..!

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். நேற்று இவரது வீட்டில் சமையல் எரிவாயு தீர்ந்த நிலையில் ஆன்லைன் மூலம் பிரபல உணவகம் ஒன்றில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்த உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென பொட்டலம் போன்ற ஏதோ ஒன்று இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அது புகையிலை என்பதை அறிந்த யாஸ்மின் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு பலமுறை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டடு கடையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News