புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று (அக்.21 ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சனிக்கிழமை (அக்.19ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,240க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்.21ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58,400க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 48,200க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,025க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.109க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News