தங்கம் வாங்கும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி செய்தி! குறைந்தது விலை!

கொரோனா கால ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால், தங்கத்தின் விலையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வந்தனர்.

அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை, ஏப்ரல் மாதந்தொட்டு, கடும் உயர்வை சந்தித்து வருகிறது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், ஒரே விலை இருந்தது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 360 குறைந்து, 45 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமுக்கு ரூபாய் 45 குறைந்து, 5 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை 60 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் 78.20-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,200-க்கும் விற்பனையானது.

RELATED ARTICLES

Recent News